• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வரும் 15 ம் தேதி 4 வது தேசிய அளவிலான எலும்பியல் மாநாடு

March 13, 2020

பந்துகிண்ண மூட்டு அறுவை சிகிச்சையை நோயாளிக்கு தகுந்தவாறு முப்பரிமாண அச்சில் ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும் அறுவை சிகிச்சையை ஒரு மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்ய இயலும் என கோவையை சேர்ந்த மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ரெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இடுப்பு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சையில் பந்து கிண்ண மூட்டில் கிண்ணத்தை சீரமைப்பு குறித்த 4 வது தேசிய அளவிலான எலும்பியல் மாநாடு கோவையில் வரும் 15 ம் தேதி நடைபெற உள்ளது. கோவை ரெக்ஸ் மருத்துவமனை சார்பாக நடைபெறும் இந்த மாநாடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரெக்ஸ்,

இடுப்பெலும்பு தேய்மானம் சிலருக்கு ஐந்து வயதில் ஆரம்பித்து 15 வயதில் பிரச்னை தெரிய ஆரம்பிக்கும். இடுப்பு, தொடை சந்திப்பான பந்து கிண்ண மூட்டில் தேய்மானம் குறித்த ,இந்த அறுவை சிகிச்சையில் உள்ள நவீன முறைகள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளதாகவும்,நாடு முழுவதும் இருந்து 200 க்கும் மேற்பட்ட சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.

வழக்கமாக, இப்பிரச்னை வயதானவர்களுக்கு அதிகம் காணப்டும் நிலையில் நவூன சிகிச்சையாக முப்பரிமாண முறையில் ஆய்வு செய்து அதற்கு தகுந்தபடி அறுவை்சிகிச்சைகள் செய்யும் போது கால விரயத்தை குறைப்பதுடன் ,நோயாளிக்கு இரத்த இழப்பு குறையும் என தெரிவித்தார்.மேலும் இந்த மாநாட்டில் பந்துகிண்ண மூட்டு அறுவை சிகிச்சை குறித்த நேரடி செயல்விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க