June 20, 2020
தண்டோரா குழு
கோவையில் வரும் திங்கள் முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வணிகர் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
கொரானா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நகரில் உள்ள 7 வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையிலும் வெகு வேகமாகப்பரவி வருகிறது. இத்தொற்றிலிருந்து நம்மையும் கடை பணியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பதின் ஒரு பகுதியாக நம் வியாபார நிறுவனங்களை வரும் திங்கட்கிழமை முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என அவசர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.