• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வருமான வரி துறை அதிகாரிகள் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம்

October 15, 2020 தண்டோரா குழு

காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்புதல் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வருமான வரி துறை அதிகாரிகள் மற்றும் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி கொண்டிருக்கும் மத்திய நேரடி வருமான ஆணையத்தின் மந்தமான போக்கை கண்டித்து வருமான ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சங்கத்தின் கோவை கிளை தலைவர் ராம்குமார், ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு உள்ளிருப்பு போராட்டத்தில் வருமான வரி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

இதில் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ராம்குமார்,

போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் ஊழியர்களும் , அதிகாரிகளும் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்து வருவதாகவும்,எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய நேரடி வரி ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்மேலும் ஊழியர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்,என தெரிவித்தார். போராட்டத்தில் அடுத்த கட்டங்களாக துறை சார்ந்த அனைத்து வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேறுதல் பணி பொறுப்புக்களை ஒப்படைத்தல் உயர் அதிகாரிகளால் கூட்டப்படும் துறைசார்ந்த கூட்டங்களில் பங்கேற்காமல் இருத்தல் போன்றவற்றை வருமான துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொள்ள போவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க