• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வடமாநில வாலிபரை அடித்து கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை

January 7, 2019 தண்டோரா குழு

கோவையில் ஹோட்டலுக்கு வழிகேட்ட வடமாநில வாலிபரை அடித்து கொன்ற இளைஞருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.

கடந்த 1ம் தேதி கோவையில் தங்கி பெட்ஷீட் வியாபாரம் செய்து வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுகேல் கட்டையால் அடித்து கொலை செய்யபட்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் குனியமுத்தூரை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், சம்பவத்தன்று சுகேல் இந்திரபால், அமித் குமார் ஆகியோர்கள் கோவை குனியமுத்தூர் பகுதிகளில் பெட்ஷீட் விற்பனைக்குச் சென்ற விட்டு மதியம் 3 மணியளவில் குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் குட்டப்பன் டீ கடை அருகே நின்றுள்ளனர். அப்போது, அங்கு வழியாக வந்த கார்த்திக் ராஜாவிடம் சுகேல் சாப்பிடுவதற்கு ஹோட்டல் கேட்டு விசாரித்துள்ளார். அதற்கு கார்த்திக் காசை என்னிடம் கொடு ஹோட்டலுக்கு நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்ல சுகேல் சிரித்துக்கொண்டே பதில் ஏதும் பேசாமல் உடனிருந்த நண்பர்களிடம் காசு எதற்கு இவரிடம் கொடுக்கனும் நாமே ஹோட்டலை தேடிக் கொள்ளலாம் என்று இந்தியில் பேசியுள்ளார்.

அப்போது இதனை கவனித்த கார்த்திக் தன்னை கிண்டல் செய்வதாக புரிந்து கொண்டு அவர்கள் காசு கொடுக்காத ஆத்திரத்தில் அங்கு கிடந்த கட்டையை எடுத்து சுகேலின் பின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து தெரியவந்தது. இதையடுத்து, குனியமுத்தூர் போலீசார் குற்றவாளியை கைது செய்து கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் முன் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையும் ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க