November 7, 2017
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவைர் அலுவகத்தில் இன்று (07.11.2017) குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், டெங்கு காய்ச்சல்
தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் குறித்து கூறுகையில்,
“கோயம்புத்தூர் மாவட்டத்தில் பில்லூர் மற்றும் சிறுவாணி குடிநீர் திட்டப்பகுதிகளிலுள்ள ஊரக பகுதிகள் மற்றும் கரையோர கிராமங்களில் வடகிழக்கு பருவமழையின்போது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும், பேரிடர்களின் போது துரித நடவடிக்கை
மேற்கொள்ளவும் இவ்வாகனம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாகனங்களில் 30 நபர்கள் கொண்ட குழு தினந்தோறும் கிராமப்பகுதகிளில் ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களிடையே டெங்குகாய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வார்கள்.
மேலும்,சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டத்தில் திடீரென உடைப்பு தொடர்பான புகார்கள் பெற்றவுடனடியாக நிவர்த்தி செய்யும். இவ்வாகனம் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருப்பதுடன், தடையில்லா குடிநீர் வழங்கவும் உறுதுணையாக இருக்கும்”. இவ்வாறு கூறினார்.