• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

December 21, 2018 தண்டோரா குழு

பொது துறை வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், குறைந்த பட்ச சம்பள விகித அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை இரயில் நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சுமார் 300 க்கும் மேற்பட்டோர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் வங்கி முன்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதனால் கோவை மாவட்டத்தில் வங்கி சேவை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டம் குறித்து வங்கி ஊழியர்கள் கூறுகையில்,

குறிப்பாக குறைந்த பட்ச சம்பள விகித அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மற்றும் பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி என மூன்று வங்கியையும் எஸ்பிஐ துணை வங்கி போன்று இணைத்து ஒரே வங்கியாக இயக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்த மூன்று வங்கிகளும் இணைந்தால் பல வங்கி ஊழியர்கள் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நிறைய வங்கிக் கிளைகள் மூடப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும் ஏற்கனவே இதுபோன்று எஸ்பிஐ துணை வங்கிகள் இணைந்த போது பல்லாயிரக்கணக்கான மூத்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்ததும் அரங்கேறியது. இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் தெரிவித்த வங்கி ஊழியர்கள் சங்கங்கத்தினர்.உடனடியாக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தனர்.இன்று நடைபெறும் இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்திலுள்ள பொதுத்துறை வங்கிகளைன் 850 கிளைகளில் பணியாற்றும் 10 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் ஒரு நாளில் மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க