June 25, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூர் அருகே
கண்டெண்ர் லாரி கேரளாவிலிருந்து ராஜஸ்தான் செல்ல டயர் லோடு ஏற்றி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த கண்டெய்னர் லாரியை கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச்சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சூலூர் பேட்டை பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட இறங்கும் பொழுது லாரியில் மின்கம்பி உரசி தீ பிடித்துள்ளது.இதை அறிந்த ஓட்டுநர் செந்தில் உடனடியாக லாரியில் இருந்த தீயணைப்பான் வாலியை எடுத்து டயர் மீது ஊற்ற முயன்றுள்ளார்.
அப்பொழுது,வாலியை எடுக்கும் பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து அருகிலிருந்தவர்கள் சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் லாரியில் பிடித்த தீயை அணைத்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.