October 17, 2020
தண்டோரா குழு
கோவை பாலக்காடு சாலையில் லாரியில் கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
கோவை பாலக்காடு சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருமலையம்பாளையம் பாலத்துறை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மதுக்கரை காவல்துறை விசாரணை செய்த போது இந்த லாரி கேரளா மாநிலம் மணப்புரம் பகுதியைச் சேர்ந்த முனீர் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் இந்த லாரியில் பயணித்த ஊர்க்காவல் படையை சேர்ந்த செரீப் மற்றும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அனாஸ் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.