• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரோட்டரி கிளப் சார்பில் பிரத்யேக இலவச பல் மருத்துவ முகாம்

August 20, 2019 தண்டோரா குழு

கோவையில் ரோட்டரி கிளப் சார்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பிரத்யேக இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

ரோட்டரி கிளப் சார்பாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடுவது போன்ற சமூக சேவைப் பணிகளை செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து கோவை ரோட்டரி மற்றும் மீனம்பாக்கம் ரோட்டரி சங்கம் மற்றும் WE DENTAL மருத்துவமனை இணைந்து, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இளைஞர்கள் அதிகம் புகை பிடிபத்தினால் ஏற்படும் பல்சிதைவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் புகை இல்லை என்றால் பொன் சிரிப்பு அதிகம் இருக்கும் என்ற வாசங்கங்ளை வைத்து இம்முகாம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட முன்னாள் ஆளுனர் பதி, மீன்பாக்கம் முன்னாள் ஆளுனர் நாசர் மற்றும் ஐடி நிறுவன ஊழியர்கள் என ஏராளமனோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க