• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரூ.238 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் – முதல்வர் பழனிசாமி !

June 25, 2020 தண்டோரா குழு

கோவையில் ரூ.238 கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழக முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான அத்திக்கடவு – அவிநாசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கு கோவை வந்தார்.இதனைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல்
நாட்டினார்.மேலும்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரியகுளத்தில் ரூ.39.74 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும், வாலாங்குளத்தில்
ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவையும் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.மேலும், அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம், ஆனைமலை, பொள்ளாச்சி வட்டாரங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும், செட்டிப்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி,வி.பி. கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு,மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத்,மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க