• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !

May 23, 2025 தண்டோரா குழு

இந்தியாவின் நம்பர் 1 ஃபர்னிச்சர் பிராண்ட், ராயல்ஒக் ஃபர்னிச்சர்,தமிழ்நாட்டில் தனது கடை வலையமைப்பை மேலும் விரிவுப்படுத்தியுள்ளது.கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் புதிய கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட திறப்பு விழாவில் விஜய் சுப்ரமணியம்,தலைவர், ராயல்ஒக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், மதன் சுப்ரமணியம், மேலாண்மை இயக்குநர், ராயல்ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், மகேஷ்வரி விஜய், இயக்குநர், ராயல்ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிரீதி மதன், இயக்குநர் ராயல்ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான ஃபர்னிச்சர் தீர்வுகளை வழங்கும் ராயல் ஒக்கின் அர்ப்பணிப்பை இந்த விரிவாக்கம் மேலும் வலியுறுத்துகிறது இந்த சிறப்புமிகுந்த தொடக்க விழாவில் ராயல்ஓக் குழுமத்திலிருந்து முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கிரண் சாப்ரியா, ராயல்ஓக் பிரான்சைஸி தலைவர், தம்மைய்யா கோடேரா, தலைமை VM & NSO மற்றும் ரஞ்சித்சுப்பட்டு, பிராந்திய பிரான்சைஸி தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.10,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கடையில் லிவிங் ரூம், பெட்ரூம். டைனிங் பகுதி, படிப்பு மற்றும் அலுவலகம், வெளிப்பகுதி, வீட்டு அலங்காரங்கள், மெத்தைகள் என பல்வேறு பரந்த மற்றும் சிறப்பாக ஃபர்னிச்சர் தொகுப்புகளைக் கொண்டுள்ளது.

கோயம்புத்தூர் வாசிகள் இப்போது தங்களின் அருகிலேயே அமைந்துள்ள இந்த புதிய கடையில், ஸ்டைலான, புத்திசாலித்தனமான மற்றும் செயல்திறன் கொண்ட ஃபர்னிச்சர்களை குறைந்த செலவில் தேர்வு செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

தொடக்க விழா சிறப்பு சலுகையாக, ராயல்ஒக் கோயம்புத்தூர் கடை, குறிப்பிட்ட கொள்முதல் மதிப்புகளுக்கான வாடிக்கையாளர்களுக்கு ரூ.17,500 வரை மதிப்புடைய ரீகிளைனர் மற்றும் ரூ.7,500 வரை மதிப்புடைய வீட்டு அலங்காரப் பொருட்களை இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க