• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா 107வது நிறுவன தினவிழா கொண்டாட்டம்

November 11, 2025 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 11-11-1919 அன்று சேத் சீதாராம் பொதார் அவர்களால் நிறுவப்பட்டு மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது.

வங்கியின் 107வது நிறுவன நாள் விழா மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்விலும் கோவை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கொண்டாடப்பட்டது.
மும்பை விழாவில் நிதித்துறை சேவைகள் செயலர் நாகராஜூ முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில்,வளரும் பாரதத்தின் தொலைநோக்கு இயக்கத்திற்கு உதவிடும் இயக்கத்தின் இந்த ஆண்டின் கருப்பொருளான `ஒன்றிணைந்து ஒளிரும் எதிர்காலத்தை உருவாக்குவோம்` என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆஷீஸ் பாண்டே தலைமை தாங்கினார். செயற்குழு இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கோவையில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டாக்டர் அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற நிகழ்விற்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், பிராந்திய தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் திரளான வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் மேனாள் தொழிலாளர்கள் குடும்ப உறுப்பினர்களோடு பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

மேலும் படிக்க