September 18, 2020
தண்டோரா குழு
கோவையில் நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவினர் சார்பாக எழுபது நாட்டு அத்திமர கன்றுகள் நடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் எழுபதாவது பிறந்தநாளை நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகள் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை மாவட்ட பா.ஜ.க.ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு சார்பாக மோடியின் எழுபதாவது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக எழுபது நாட்டு அத்தி மரக்கன்றுகள் நடும் விழா கோவை வ.ஊ.சி மைதான வளாகத்தில் நடைபெற்றது. ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவின் மாவட்ட செயலாளர்கள் அபினவ்,மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.நந்த குமார்,மாவட்ட பொது செயலாளர் தாமு ஜி மற்றும் பிரிவின் பரிபாரி திருமதி வத்சலா ஆகியோர் கலந்து கொண்டு நாட்டு அத்தி மர கன்றுகளை நட்டனர். இதில் பா.ஜ.க ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவின் குறிச்சி மண்டல கணேஷ்,ஆலாந்துறை மண்டல சிவகுமார்,பேரூர் மண்டல சுரேஷ்,காளப்பட்டி ரவி,துடியலூர் நாகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.