July 9, 2020
தண்டோரா குழு
கோவையில் சுப்ரீம் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ அறிகுறி உறுதியானதை அடுத்து அக்கடை பூட்டப்பட்டது.
கோவை காந்திபுரம் நூறடி சாலையில் சுப்ரீம் மொபைல் கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனோ அறிகுறி உறுதியானது.இங்கு 30 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியனாது.
இதையடுத்து அக்கடை பூட்டப்பட்டது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் கடை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவரை மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் அழைத்துச்சென்றனர் மேலும் கடை பூட்டப்பட்டு தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர்.