September 14, 2020
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி பரிசோதனை கூடங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட், கோவிட் 19 பரிசேதானையை தமிழ்நாட்டில் துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இந்த லேப், சமீபத்தில் ஐசிஎம்ஆர் மற்றும் என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்றுள்ளது.
கோவையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இந்த லேப், பரிசோதனைகளை துவங்கியுள்ளது. ஏற்கனவே மும்பை, புனே, தானே, சென்னை,கொச்சி, டில்லி மற்றும் பெங்களூருவில் செயல்பட்டு வரும் லேப்கள் அங்கீகாரம் பெற்று கோவிட் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் துணைத்தலைவர் டாக்டர் அனிதா சூர்யநாராயணன் கூறுகையில்,
’’சென்னையோடு, கோவையிலும் கோவிட் 19 பரிசோதனைகளை, ட்ரூநெட் தொழில்நுட்பத்தில் பரிசோதனை செய்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். தொற்றுநோய் கண்டறிவதில் முன்னணியில் மெட்ரோபோலிஸ் 8 லேப்களிலும் மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் பல ஆயிரம் சோதனைகளை செய்து வருகிறது. நோயாளிகளை மையப்படுத்தி, உயர் தொழில்நுட்பத்தில் நம்பகத்தன்மையான பரிசோதனை முடிவுகளை அளித்து வருகிறது. இந்த தொற்றுநோய் சமயத்தில், பலரும் முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள இந்த லேப்பை தேர்வு செய்ய விரும்புகின்றனர்,’’ என்றார்.
ட்ரூநேட் எப்படி செயல்படுகிறது?
ஆர்டி பிசிஆர் அல்லது பின்னோக்குதல் பாலிமெர்ஸ் சங்கி தொடர் மறுவினை முறையில், குறிப்பிட்ட ஜீன்களை ஆர்என்ஏ மாதிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கிறது. சிறிய அளவு ஆர்என்ஏ, டிஎன்ஏவாக மாற்றம் செய்யப்பட்டு, சில ரசாயண மாற்றங்களைக் கொண்டு பெரிதாக்கப்படுகிறது. ட்ரூநேட் என்பது, பேட்டரியை பயன்படுத்தி சிப் அடிப்படையில் இயங்கும் ஆர்டி – பிசிஆர் கிட். இது இ–ஜீன்களையும், ஆர்டிஆர்பி ஜீன்களையும் வைரஸ் ஆர்என்ஏ வில் இருந்து பிரித்தெடுத்து கண்டுபிடிக்கிறது ட்ரூநேட் இயந்திரங்கள். இந்த பரிசோதனைகள் கொரோனா வைரஸ்சை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது.
கோவையில், ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவ்ன் ரோட்டில் 218 ம் எண்ணில் உள்ள மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட், லேப்பில் பரிசோதனை செய்யப்படுகிறது.
தொலைபேசி எண்: 0422 4394949.