• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் எப்போது துவங்கும்?

March 18, 2023 தண்டோரா குழு

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை விளாங்குறிச்சி சாலை ஸ்ரீ விக்னேஷ் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வை.பாலசுப்பிரமணியன், மெட்ரோ ரயில் சேவைக்கான நிதி ஒப்புதல், நிலம் கையகப்படுத்துதல், திட்ட அறிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக விளக்கம் அளிக்குமாறு கேட்டிருந்தார்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கூறியிருப்பதாவது:

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து நிதி ஒப்புதல் பெறப்படவில்லை. தமிழக அரசின் ஒப்புலுக்கு பிறகு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையானது, சிஸ்ட்ரா மற்றும் ரைட்ஸ் என்னும் கூட்டமைப்பால் தயாரிக்கப்படுகிறது. தற்போது, மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கவில்லை.

மெட்ரோ ரயில் பாதை செல்லும் இடத்தில் ஆர்ஜிதம் செய்யப்படும் நிலம் மற்றும் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை சதுரஅடிக்கு எவ்வளவு, அவை சந்தை மதிப்பில் வழங்கப்படுமா அல்லது அரசின் வழிகாட்டுதல்படி வழங்கப்படுமா என்பது, விரிவான திட்ட அறிக்கை அரசால் தயாரிக்கப்பட்டதும் பொதுத் தளத்தில் வெளியிடப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தால் தங்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படும் என யாரும் நீதிமன்ற தடையுத்தரவு பெறவில்லை. இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் படிக்க