• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மூன்று மாத கர்பிணி கணவன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டம்

April 4, 2019 தண்டோரா குழு

கோவையில் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி, மூன்று மாத கர்பிணி கணவன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை நரசிபுரம் பகுதியை சேர்ந்த இளம் (கவுரி) பெண்ணும், சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவரும்
கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருக்கமாக பழகி வந்ததில், இளம் பெண் கர்பமாகி உள்ளார். இதனையடுத்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் திருமண செய்து கொண்டு சித்தாபுதூர் பகுதியில் தனியா வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் விவகாரம் அர்ஜூனின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்துது, அவரை சிவானந்தபுரத்தில் உள்ள வீட்டுக்கு அவரது பெற்றோர் வர வழைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற அர்ஜூன், திரும்பி வராமல் இருந்துள்ளார். மேலும் தன்னை பெற்றோர் வீட்டிலே சிறை பிடித்து வைத்துவிட்டதாகவும் தன்னை காப்பாற்ற கோரியும் மனைவிக்கு மெசேஜ் செய்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் தனது கணவரை மீட்டு தரக் கோரி,காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் விசாரணைக்கு தனது கணவர் வீட்டார் ஒத்துழைக்காமல் இருந்துள்ளனர். இதனால் தனது கணவரை தன்னிடம் உடனடியாக சேர்த்து வைக்க கோரியும், அவரை நேரில் காண்பிக்க கோரியும், சிவானந்தபுரத்தில் உள்ள அர்ஜூன் வீட்டின் முன்பாக மூன்று மாத கர்பிணியான அந்த பெண் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது, தனது கருவகை கலைத்துவிட கோரி கணவன் வீட்டார் வற்புறுத்துவதாகவும், தனது கணவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க போவதாகவும் மிரட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், காதலித்து திருமணம் செய்த தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்கும் வரை இந்த இடத்திலே தொடந்து தர்ணா போராட்டத்தை தொடர்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க