April 24, 2020
தண்டோரா குழு
கோவையில் மூன்று காவலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் 3000 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக 544 காவல் துறையினருக்கு கொரொனா தொற்று இருக்கிறதா,இல்லையா,என பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 537 பேருக்கு தற்போது பரிசோதனை முடிவுகள் வரப்பட்டுள்ளது. அதில் அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு பெண் காவலருக்கு ஏற்கனவே கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது மருத்துனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் கோவை போத்தனூரில் நேற்று பரிசோதனை செய்யப்பட்ட,இரண்டு பெண் காவலர்கள் உள்ளிட்ட மூன்று பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.மூன்று காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரின் சளி மாதிரிகள் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக கோவையில் கொரொனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மூன்று காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மற்ற காவலர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.