• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மூன்றாவது முழு ஊரடங்கு – வெறிச்சோடிய நகரம் !

July 19, 2020 தண்டோரா குழு

கோவையில் மூன்றாவது முழு ஊரடங்கால் கடைகள், வணிக நிறுவனங்கள், அடைக்கப்பட்டன.வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி கடந்த ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மூன்றாவது முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

கோவையில் இன்று மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறந்திருந்தன. ஓட்டல்கள் துணிக் கடைகள் மளிகை கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் என அனைத்து கடைகள் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.தொழிற்சாலைகளும் இயங்கவில்லை ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இதனால் கோவையேவெறிச்சோடி காணப்பட்டது.

ஒரு சிலர் தங்கள் வீடுகளில் பழங்கால விளையாட்டுகள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தனர். கோவையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அவனாசி சாலை, திருச்சி சாலை, சக்தி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடின மேலும் ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, எம்ஜிஆர் மார்க்கெட், அண்ணா மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் அங்கு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கோவையில் ஆம்புலன்ஸ்கள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களை தவிர்த்து வேறு எந்த வாகனங்களும் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.கோவையில் உள்ள 54 இடங்களில் போலீசார் தற்காலிகமாக சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அதுபோன்று வாகனங்கள் செல்வதை தடுக்க கோவை காந்திபுரம் மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாலம் உள்பட அனைத்து மேம்பாலங்களும் இரும்பு தடுப்புகள் வைத்து மூடப்பட்டிருந்தன மேலும் விதி முறைகளை மீறி வெளியே நடமாட இவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அத்துடன் அவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இன்று மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி அதனால் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு விழிப்போடு சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க