• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மூதாட்டி கொலை – சொத்துக்காக கொல்லப்பட்டாரா?

October 1, 2020 தண்டோரா குழு

கோவையில் மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.சொத்துக்காக கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வைசியாள் வீதி கெம்பட்டடிகாலனியை சேர்ந்தவர் சிவானந்தம்.இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 62).இவர்களுக்கு ஜெயந்தி என்ற மகளும், பிரகாஷ் பாகு, ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். சிவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.மணிகண்டன் தவிர பிற அனைவருக்கு திருமணமாகிவிட்டது. இதனால் மணிகண்டனுடன் தனலட்சுமி வசித்து வந்தார். மணிகண்டன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.நேற்று இரவு தனலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமியை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டுக்குள் புகுந்து தனலட்சுமியை கத்தியால் கழுத்து பகுதியில் குத்தியுள்ளனர். அதில் அவர் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.தனலட்சுமியை கொன்றுவிட்டு அந்த மர்ம ஆசாமிகள் அவர் அணிந்து இருந்த நகைகள்,மற்றும் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர்.பின்னர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மணிகண்டன் வீட்டில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் கழுத்தில் கத்தி பாய்ந்த நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.அங்கு அக்கம்பக்கத்தினர் சென்று மூதாட்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் இதுகுறித்து பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் கழுத்தில் உள்ள கத்தியின்பிடி, கதவு, பிரோவின் கதவு, போன்ற இடங்களில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தார்கள். தனலட்சுமி வீட்டில் குடியிருப்பவர்கள்மற்றும் அந்த குடியிருபிற்கு வந்து சென்றவர்களிடம் போலிசார் சம்பவ இடத்திலேயே கைரேகைகளை பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தார்கள்.

இதைதொடர்ந்து தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தனலட்சுமிக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது. எனவே அவர் சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகை பணம் திருடும் போது ஏற்பட்ட தகராறில் கொலைசெய்யபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க