• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம் திறப்பு

September 2, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் முதன்முதலாக முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைககள் 10 பேர் இணைந்து “கோவை டிரான்ஸ் கிச்சன்” என்ற உணவகத்தை துவக்கி உள்ளனர். இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால் மட்டுமே செயல்பட கூடிய உணவகம் என்பதே இதன் சிறப்பம்சமாகும். தற்போது 10 பேர் இணைந்து இதை ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு UWC ஸ்வஸ்தி, சி.எஸ்.ஐ, அப்பாசாமி கல்லூரியினர் உதவியுள்ளனர். அப்பாசாமி கல்லூரியில் இந்த 10 பேருக்கு உணவகம் செயல்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 பேரால் இயங்கும் இந்த உணவகமானது மக்களிடையே நன் வரவேற்பை பெற்று செயல்பட்டால் 6 மாதம் கழித்து மற்றொரு கிளை ஆரமிக்க திட்டமிட்டள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருநங்கையினருக்கு வாழ்வாதாரம் அளிக்க இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்வோம், வழக்கமான ஹோட்டல்களை போன்றே இதுவும் இயங்கும் என்று கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் சங்கீதா தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக திருநங்கைகளால் முழுக்க முழுக்க செயல்படும் உணவகம் இதுவேயாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க