• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

February 9, 2019 தண்டோரா குழு

கோவையில் முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கோவை கா௫ன்யா கல்லூரி மாணவ மாணவிகள் 15 விதிமுறைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் கல்லூரி சார்பில் கோவையில் முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழா டவுன்ஹால் பஸ்நிலையம் அ௫கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் பெரியசாமி ,மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கா௫ன்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னார் ஜவகர் சிறப்பு வி௫ந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு பேனரில் கையெழுத்துட்டனர்.

பின்னர், கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க கூடாது, சிக்னல் விளக்குகளை மதித்து நடக்க வேண்டும், பாதுகாப்பான வேகத்திலேயே செல்ல வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் ஆகிய 15 விதிமுறைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் மேலும் இதை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினர்.

மேலும் இத்துடன் தமிழக அரசு அமல்படுத்தி உள்ள பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் துணியிலான பைகளையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.

மேலும் படிக்க