• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 272 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

March 19, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 272 ஆசிரியர்களுக்கு  கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு தொடக்க பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற குறைந்த பட்ச கல்வி தகுதியாக ப்ளஸ் 2 தேர்ச்சி, டிடிஇ எனும் பட்டயப் படிப்பு முடிக்க வேண்டும். இவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபின் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.

இதற்கிடையே தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் டிடிஇ பட்டயப்படிப்புக்கு பின் பட்டப்படிப்பை படித்து வந்தனர்.இதையடுத்து அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.இவ்வாறு உயர்கல்வி படித்தால் மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.ஆனால் சில ஆசிரியர்கள் முன் அனுமதியின்றி உயர்கல்வி படிப்பை படித்ததாக புகார் எழுந்தது.

குறிப்பாக 80 சதவீதம் பேர் வகுப்புக்கு செல்லாமல் உயர்கல்வி நிறுவனங்களில் பணம் கொடுத்து முறைகேடாக சான்றிதல் பெற்று உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.இதனையடுத்து தொடக்க கல்வி இயக்குனரின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 272  ஆசிரியர்களுக்கு கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலுமுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.15 நாட்களில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்,விசாரணையில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால், அரசு பணியாளர் நடத்தை  விதி 20ஐ மீறியதால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொடக்க கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க