• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதுநிலை மாணவர்கள் மற்றும் அரசு மருதுவர்கள் போராட்டம்

October 31, 2019 தண்டோரா குழு

4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதுநிலை மாணவர்கள் மற்றும் அரசு மருதுவர்கள் இணைந்து,அரசு மருத்துவமனையில் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை பணி அமர்த்த வேண்டும், பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தல் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 6 நாட்களாக இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ள நிலையில் இன்று 100 க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க