July 25, 2020
தண்டோரா குழு
கோவை பாலகுரு கார்டன் பகுதியில் ஏராளமான வீடுகள் இருக்கின்றன.இந்த வீடுகளில் கொள்ளையடிக்க மூன்று முக மூடி கும்பல்கள் சுற்றி திருந்துள்ளனர். இது வீடுகளில் மாட்டப்பட்டுள்ள சி சி டி வி கேமராவில் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர் .
நள்ளிரவு 12.30 மணியளவில் 4 வீடுகளில் கொள்ளை அடிக்கும் முயற்சி நடந்துள்ளது. முயற்சி நடந்த அனைத்து வீடுகளிலும் குடும்ப நபர்கள் இருந்துள்ளனர்.ஆனால் அவர்களால் பொருட்களை களவாட முடியாமல் திரும்பியிருக்கின்றனர்.பாலகுருகார்டன் பகுதியில் இரு நபர்கள் புதியதாகவும் 3 நபர்களை ஆயுதங்களுடன் கண்டுள்ளனர். இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல்கள் கொடுத்த நிலையில் நள்ளிரவு ரோந்து சென்ற போலிஸார் பாதுகாப்பு வழங்கி விசாரித்துள்ளனர்.ஆனால் முகமுடி கொள்ளை கும்பல் இதுவரை பீளமேடு போலிஸாரால் கைது செய்யப்படவில்லை. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.