• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மீண்டும் விமான சேவை இன்று முதல் துவக்கம் !

May 25, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா பாதிப்புக்கு பின்னர் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை இன்று மீண்டும் துவங்குகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் இந்தியா முழுவதும் உள்நாட்டு விமான சேவை இன்று முதல் துவங்குகிறது.
கோவைக்கு வரும் பயணிகளை வரவேற்கவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும், கோவை விமான நிலையம் தயார் நிலையில் உருவாக்கப்பட்டுள்ளது.துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமிநாசினி ஸ்ப்ரே செய்யப்பட்டுள்ளது.பயணிகளை பரிசோதனை செய்ய,தெர்மல் தெர்மாமீட்டர், சமூக விலகலுக்கான அளவீடு,லக்கேஜ்களுக்கு கிருமிநாசினி தெளித்தல்,கொரோனா அறிகுறி இருந்தால்,அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

IMG-20200525-WA0098

கோவை விமான நிலையத்திற்கு சென்னை, மும்பை,பெங்களூரு,டில்லி உள்ளிட்ட நகரங்களிலிருந்து, 5 இண்டிகோ விமானமும், சென்னையிலிருந்து ஒரு ஸ்பைஸ் ஜெட் விமானமும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று காலை முதல் பிளைட் டெல்லியிலிருந்து 54 பேர்களுடன் கோவை வந்தடைந்தது.பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து இதில் மாற்றம் இருக்கலாம் எனவும் நோய்தொற்று இருந்தால் அவர்களை தனிமைப்படுத்திடவும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் விமான சேவை தொடக்கம் நோய் பரவ தொடங்கிடுமோ என கோவை மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

மேலும் படிக்க