• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்ற பி.டி.சுரேஷிற்கு நினைவேந்தல் கூட்டம்

September 27, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட அனைத்து உடற்பயிற்சிக் கூடம் சார்பில் கொரோனா தொற்றால் மறைந்த மிஸ்டர் தமிழ்நாடு மற்றும் மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்ற பி. டி. சுரேஷிற்கு நினைவேந்தல் கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு கோவை காந்திபார்க்கில் அமைந்துள்ள மாநகராட்சி உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது.

நினைவேந்தல் கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில பளு தூக்கும் சங்க துணைத் தலைவரும் கோவை நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனருமான அ. முரளிதரன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில்

கேரளாவில் 1979 – ல் பிறந்து கோவையில் தனது வாழ்க்கையை தொடர்ந்த பி. டி. சுரேஷ் கோவை அமைச்சூர் பாடி பில்டர், ஆண் அழகன் மற்றும் சிறந்த உடற்கட்டு சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரனமாக தனது 44-வது வயதில் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி அன்று நம்மைவிட்டு பிரிந்து விட்டார். இவர் தனது வாழ்க்கையில் பல இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக விளங்கியவர். இவர் பல இளைஞர்கள் மற்றும் மாணவர்களை நல்ல ஆரோக்கியத்துடனும், பல ஆண் அழகன் போட்டியில் பங்கேற்று பல பட்டங்களை வெல்ல உதவி புரிந்துள்ளார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறைகளுக்கு மேல் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும், 2009 – ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த உடற்பயிற்சி கூடங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கல்லூரிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவில் முன்னதாக கோவை அமைச்சூர் பாடி பில்டர், ஆண் அழகன் மற்றும் சிறந்த உடற்கட்டு சங்கத்தின் செயலாளர் ரகுமான் வரவேற்று விழா முடிவில் நன்றி கூறினார். மேலும் விழாவில் மூத்த சங்க தலைவர் ஜெயபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க