• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மினி லாரி மோதி 9- ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலி

November 18, 2019

கோவை தொண்டாமுத்தூர் அருகே மினி லாரி மோதி 9- ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

கோவை வடவள்ளி நவாவூர்‌பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் பி.பி.மொகந்தி (45) இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள செயற்கை கால் பெறுத்தும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் நயன்மொந்தி (14) சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் வீட்டில் இருந்து உள்ளார். காலை 11 மணியளவில் ரோட்டின் எதிரே உள்ள மளிகை கடைக்கு பொருள் வாங்க சாலையை கடக்க முயன்ற பொழுது அங்கு கணுவாயிலிருந்து நவாவூர் நோக்கி வந்த சரக்கு மினி லாரி மாணவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லூம் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தந்தை வடவள்ளி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க