• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

February 1, 2019 தண்டோரா குழு

கோவையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அரசின் மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமானது இன்று நடைபெற்றது.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட தொழில் மையம் அரங்கில் செல்போன் வியாபாரிகள் நலச்சங்கம் உறுப்பினர்களுக்கு அரசின் மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமனது இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மையத்தில் கல்வித்தகுதி ,வயது வரம்பு தகுதிகளோடு இருக்கும் பயனாளிகளுக்கு அரசு திட்டத்தின் கீழ் பயன் பெற்றுக்கொள்ளலாம். 3லட்சம் முதலீட்டில் முதன் முதலாக தொழில் துவங்கி மேலும் வளர்வதற்கு இது ஒரு வாய்ப்பு முறையாக இருக்குமேயானால் பணத்தை திருப்பி செலுத்தும் பட்சத்தில் மேலும் கூடுதலாக வங்கிகளை தானாக முன் வந்து அவர்களே கடன் உதவிகளை அளிப்பதாக இந்த திட்டமானது அமைகிறது.

இதை தொடர்ந்து மாவட்ட தொழில் மையத்தில் இலவச வசதி மையம் கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வருகிறது, இதன் மூலம் இப்போ வந்துள்ள சிட்டி திட்டத்தின் கீழ் ஆன்லைன் ட்ரான்ஸ்பாண்ட் இருக்க வேண்டும் என்பதற்காக இலவச முறையில் 306 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யபட்டுள்ளதாகவும் இதை தொடர்ந்து செல்போன் வியாபாரிகள் மற்ற வியாபாரிகள் தொழில் தொடங்க இருப்போர்கள் பயன் பெற்று கொள்ள வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் செல்போன் வியாபாரிகள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் படிக்க