• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்

June 26, 2019 தண்டோரா குழு

கோவையில் துப்புரவு பணியாளர்களின் தினக்கூலியை உயர்த்தி தர வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தங்களுக்கு கடந்த இரண்டாயிரத்து பதினேழு பதினெட்டாம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி 350 ரூபாய் தினகூலியாக வழங்கப்பட்டதாகவும் இதுவரை அந்த கூலியே நடைமுறையில் உள்ளதால் தாங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கான தினக்கூலியை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் பல ஆண்டுகளாக தாங்கள் தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றி வருவதால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட பஞ்சாயத்துகளின் துணை இயக்குநரிடம் வழங்கிய நிலையில் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க