• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு ஆலோசனை மையம் துவக்கம்

September 1, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு,சுயதொழில் மற்றும் திறன் மேம்பாடு ஆலோசனை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவா் ஜி.எஸ்.சமீரன் அவா்கள் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் ஆட்சியர் சமீரன் பேசும்போது,.

தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுகென்று கடந்த வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 29 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,இன்றுமாவட்ட ஆட்சியார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு,சுயதொழில் மற்றும் திறன் மேம்பாடு ஆலோசனை மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்மையம் நிரந்தமாக செயல்படும்.இம்மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தகுதிகள் மற்றும் திறன்களுக்கு தகுந்தவாறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்.

மேலும், சுயதொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிகளில் கடன்கள் பெறுவதற்கான வழிமுறைகள்; குறித்த ஆலோசனைகளும்;வழங்கப்படும். இதன்மூலம், மாற்றுத்திறனாளிகளும், சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு இணையாக பொருளாதார முன்னேற்றம் பெற்று வாழ்க்கையில் நல்ல நிலையினை அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க