• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு தள்ளுவண்டி வழங்கிய கமஹாசன் !

August 3, 2021 தண்டோரா குழு

கோவிட் காலத்தில் உதவி செய்வது மனிதன் மனிதனுக்குச் செய்யும் உதவியே தவிர இந்தியன் செய்யும் உதவி அல்ல தமிழன் தமிழனுக்கு செய்யும் உதவி அல்ல என மநீம தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் ஆட்டோ ஓட்டு வீடுகள் உட்பட 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இந்த முகாமினை மக்கள் நீதி மய்யம் நடிகர் கமலஹாசன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அதில் கோவிட் காலத்தில் உதவிகள் செய்வது மனிதன் மனிதனுக்கு செய்யும் உதவியே தவிர இந்தியன் இந்தியனுக்கு செய்யும் உதவி அல்ல தமிழன் தமிழன் உப்பு செய்யும் உதவி அல்ல என்று தெரிவித்தார். எங்களுக்கு முன்பு என பலரும் இதனை செய்து வருகின்றனர். அவர்களை முன்னோடியாக எடுத்துக் கொண்டு நாங்கள் இந்த களத்தில் இறங்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் இக்காலத்தில் சாதிகளை கடந்து நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் கூறினார்.அதனைத் தொடர்ந்து கட்சியின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் இரண்டு பேருக்கு நலத்திட்ட உதவிகளை அளித்தார்.அதில் ஒரு குடும்பத்தார்,கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் காலனி அணிவித்த மாற்றுதிறனாளி சிறுவனின் குடும்பத்தார் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க