September 24, 2020
தண்டோரா குழு
முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி மூலம் இயங்கும் சர்க்கர நாற்காலியை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் covid-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட பணிகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 லட்சம் மதிப்பில் பேட்டரி மூலம் இயங்கும் 50 சக்கர நாற்காலிகள், மேலும் காது கேட்கும் கருவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு முதற்கட்டமாக பேட்டரி மூலம் இயங்கும் சக்கர நாற்காலியையும்,நான்கு பேருக்கு காது கேட்கும் கருவி, வாட்டர் பெட் பொருத்திய சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் covid-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் காவல்துறை ஆணையாளர் மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இ எஸ் ஐ மருத்துவமனை முதல்வர் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.