May 7, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் கடைக்கு வரும் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் குடைகளை எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.ஆனால் ஒரு சிலர் மட்டுமே குடைகளை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் கோவையில் திடீரென வேகமாக மழை பெய்தது அந்நிலையிலும் டாஸ்மாக் கடைக்கு வந்தவர்கள் வரிசை கலையாமல் நின்று மதுக்கடை வாங்கிச் சென்றனர்.அங்கு வந்தவர்களில் ஓரிருவர் மட்டுமே குடைகளை எடுத்து வந்திருந்தனர்.காவல்துறையினரும் அரசு ஏற்கனவே டாஸ்மாக் கடைக்கு வரும் போது குடைகளை எடுத்து வரவேண்டும் என்று கூறியிருந்தது தானே என்றும் அவர்களை கேள்வி கேட்டனர்.கோவை லாலி ரோடு டாஸ்மாக்கில் நின்றவர்களில் ஒருவர் ரெயின் கோர்ட் அணிந்து அம்சமாக வரிசையில் மதுவினை வாங்க காத்திருந்தது அங்குள்ளவர்களை திரும்பி பார்க்க செய்தது.