September 2, 2020
தண்டோரா குழு
கோவை நகரில் நேற்று பெய்த கனமழையில் மேம்பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்றய தினம் பலத்த கனமழை பெய்தது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவிநாசி சாலை மேம்பாலம் மற்றும் வடகோவை மேம்பாலம் கீழ் வெள்ளநீர் தேங்கியது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதனை அறிந்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் ஆர்எஸ்புரம் பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.