September 8, 2020
தண்டோரா குழு
கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தி.மு.க இளைஞரணியினர் கோசங்கள் எழுப்பினர்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி, தி.மு.க.இளைஞரணி-மாணவரணி இணைந்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக,கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் தி.மு.க இளைஞரணி கோவை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திமுக இளைஞரணி சார்பில் நூதன முறையில் நடைபெற்றது. இதில் மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியும் மேலும் , நீட் தேர்வை ரத்து செய்ய கோரி புறா காலில் கோரிக்கை மனுவை கட்டி மத்திய அரசுக்கு அனுப்புவது போல பறக்க விட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரிய கடைவீதி பகுதி மாணவரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் PJ யாசர்,CMS இஸ்மாயில்,லேனா தன்ஜில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.