July 1, 2020
தண்டோரா குழு
உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கோவையில் மருத்துவமனை முதல்வர்களை மஜக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து
தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா போன்ற கொடிய நோய்களை எதிர்த்து தன்னுயிரை பொருட்படுத்தாமல் களத்தில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்,அவர்களை கெளரவிக்கும் விதமாக இன்று கோவையில் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர்.காளிதாஸ், மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் டாக்டர்.நிர்மலா, ஆகியோரை மஜக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம்,தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர்.இச்சந்திப்பில் கொரோனா என்னும் கொடிய நோயை எதிர்த்து மருத்துவர்கள் பணியாற்றுவதை நினைவு கூர்ந்தனர்.
மேலும் அவர்களை கெளரவிக்கும் விதமாக பூச்செண்டு, மற்றும், நினைவு பரிசுகளை துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இச்சந்திப்பில் IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் அசாருதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.