October 14, 2017
தண்டோரா குழு
கோவையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வாசீம் என்பவர் அதே பகுதியில் தனது மனைவி ஜோஹரமா மற்றும் மகள் அன்ஃபியா,மகன் பர்ஹான் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.ஏற்கனவே குடும்ப பிரச்சினை நிலவி வந்த சூழலில் கடந்த 2015ம் ஆண்டு தனது மனைவி ஜோஹரமாவை வாசிம் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.இது தொடர்பான வழக்கு கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதையடுத்து, அரசு தரப்பில் 14 சாட்சியங்களும் 7 வயது மகள் முக்கிய சாட்சியாகவும் விசாரிக்கப்பட்டனர்.இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.அப்போது குற்றவாளி வாசீமிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி குணசேகரன் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.இதையடுத்து குற்றவாளி வாசீம் கோவை மத்கிய சிறையில் அடைக்கப்பட்டார்.