• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

October 23, 2019

ரயில் நிலையங்கள் மற்றும் விரைவு ரயில்களை தனியார் மயமாக்கும் உத்திரவை ரத்து செய்யக்கோரி , அதன் நகலை எரித்து , மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள 50 முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க கமிட்டி அமைத்தது. அதன்படி நிதி ஆயோக்கின் முதன்மை செயல் அதிகாரி அமிதாப்காந்த் தலைமையிலான கமிட்டி கடந்த 10 ஆம் தேதி தனியாரிடம் ஒப்படைக்க அனுமதி வழங்கி உத்திரவை பிறப்பித்தது. இந்த உத்திரவை கண்டித்து எஸ் ஆர் எம் யூ மற்றும் ஏ ஐ ஆர் எப் தொழிலாளர்கள் கூட்செட் ரோடு ரயில்வே பணிமனை முன்பாக , கருப்பு ஆடை மற்றும் பேட்ஜ் அணிந்து , ,மத்திய அரசை கண்டித்து , ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் உத்திரவு நகலை எரித்து கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை , தனியாரிடம் ஒப்படைப் பதற்காக 33 வருட சர்வீஸ் முடிந்தவர்களுக்கு ஒய்வுக்கு முன்பே கட்டாய ஒய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரினர். பணி அனுபவம் பெற்ற ஊழியர்களை திறமையற்றவர்கள் எனக்கூறுவதை கண்டித்தும் , ரயில்வே துறையை ஐ ஆர் ஆர் எஸ் சி என்ற கார்ப்பரேஷனின் கீழ் கொண்டு வந்து தனியார் வசமாவதை எதிர்த்து கோசங்களை எழுப்பினர். பணியாளர்களுக்கு உரிய இடமாறுதல் அளித்து, நிரந்தர வேலை வாய்ப்பை பறித்து ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றும் சதிதிட்டத்தை நிறுத்தக்கோரி நகல் எரிப்பு போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தடுத்த போராட்டங்களை நடத்தப்போவதாக தெரிவித்தனர்.1

மேலும் படிக்க