• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 141 பேர் மீது வழக்கு

June 30, 2023 தண்டோரா குழு

0பகோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சாலை விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மது போதையில் வாகனம் ஓட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஒரு வழிப்பாதை, பாதசாரிகளுக்கான குறுக்கு நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கை மாநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,நேற்று முன் தினம் இரவில் இருந்து,கோவை மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
42 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 141 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், தங்களை அழைத்து செல்வதற்கு வசதியாக வாகன ஓட்டிகளை வைத்து கொள்ள வேண்டும்.
மாநகரில் உள்ள மதுபானக்கூடங்களின் உரிமையாளர்கள், தங்களின் மதுபானக் கூடங்களுக்கு வருவோர்களிடம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது எனவும், அழைத்துச் செல்ல ஒரு நபரை கூட்டி வரவேண்டும் எனவும், அவ்வாறு, வாகன ஓட்டிகளுடன் வராதவர்களுக்கு, மதுபானக்கூடங்களின் உரிமையாளர்கள் நம்பிக்கையான வாகன ஓட்டிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் என போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க