May 7, 2020
தண்டோரா குழு
கோவை ஆவாரம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில், வரிசையில் முதல் நபராக நின்று மதுவாங்கிய ஸ்பெயின் நாட்டினர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இதையடுத்து, தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 95 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர்.
இந்த நிலையில், கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஸ்பெயின்நாட்டைச்சேர்ந்த கோர்சே, பெர்பைன் என்ற இருவர் முதல் இரு டோக்கன்களை பெற்று வரிசையில் நின்று மதுவை வாங்கி சந்தோஷத்துடன் சென்றனர்.