May 7, 2020
தண்டோரா குழு
கோவை அருகே மதுபோதையில் காரை ஓட்டிய இளைஞர்கள், ஏற்படுத்திய விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது.
கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன.இந்நிலையில்,இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கியது.நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுவை வாங்கி மகிழ்ச்சியாக சென்றனர்.பல கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கோவை தொண்டாமுத்தூர் அடுத்து புதுப்பாளையம் பகுதியில் , TN 66 Y 8986என்ற எண் கொண்ட மாருதி சிப்ட் காரில், மது போதையில் இளைஞர்கள் அதிக வேகமாக வந்து திருப்ப முயன்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தலைகுப்புற விழுந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காரை திருப்பி, காரில் உள்ள இளைஞர்களை மீட்டனர் அப்போது,அவர்கள் மது போதையில் தாறுமாறாக ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு விறைந்து வந்து காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கார் ஓட்டிவந்த இளைஞர்கள், எந்த பகுதி, என்ன என்பது குறித்து முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதைப்போல் இரண்டு இளைஞர்கள் மது அருந்திவிட்டு பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அதிவேகமாக வந்ததாகவும் குனியமுத்தூர் தாண்டி ஆத்துபாலம் பகுதியில் போதை தலைக்கேறிய நிலையில் ஆத்துப்பாலம் மின்மயானத்தில் சுவற்றில் வேகமாக மோதியுள்ளனர். இதில் இருவரின் உடல்களும் பலத்த காயம் அடைந்து உள்ளது அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடாகம் பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவருக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது.