• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடக்கும் பேரணியில் கலந்து கொள்ள கேரள முதல்வருக்கு கமல் அழைப்பு

May 21, 2018 தண்டோரா குழு

கோவை மக்கள் நீதி மய்யம் சார்பில் நடக்கும் பேரணியில் கலந்து கொள்ள கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு கமல் அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். கட்சி துவங்கும் , முன்பே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த கமல் கடந்தாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து கமல்ஹாசன் பேசினார்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் கமலஹாசன் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்,

ஜூன் மாதத்தில் கோயம்புத்தூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்போவதாகவும் அதில் கலந்துகொள்ள பினராயி விஜயனை அழைத்ததாகவும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்புக்கு பிறகு பினராயி விஜயன் மற்றும் கேரள தொழில் துறை அமைச்சர் எ.சி. மொய்தீன் ஆகியோருடன் கமல்ஹாசன் ஒன்றாக மதிய உணவருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க