• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 41 கோடி மதிப்பில் வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள்

December 14, 2021 தண்டோரா குழு

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 41 கோடி மதிப்பில் வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் காணொளி வாயிலாக இன்று 5 மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் பெறுதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.அதில் கோவையும் ஒன்றாகும்.

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முதல்வர் அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைத்ததும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் கோவையில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவையில் உள்ள 1068 சுய உதவி குழுக்களுக்கு 41.31 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்டம் வழங்கப்பட்டது. இதில் 12,816 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் படிக்க