• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போதை தரும் மாத்திரைகளை விற்ற மருந்துகடைகாரர்கள் 2 பேர் கைது

February 1, 2019 தண்டோரா குழு

கோவையில் மருத்துவசீட்டு இல்லாமல் போதை தரும் மாத்திரைகளை விற்ற மருந்துகடைகாரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதனவேல்.இவர் அதே பகுதியில் மருந்துகடை நடத்தி வருகின்றார். மருந்தகத்திற்கு வரும் இளைஞர்கள், மாணவர்களுக்கு மருத்துவசீட்டு இல்லாமல் nitrazevam என்ற போதை தரும் மாத்திரையை விநியோகம் செய்வதாக கிடைத்த புகாரின் பேரில்அவரை குனியமுத்தூர் காவல் துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 70 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதே போன்று சரவணம்பட்டியில் மருத்துகடை நடத்தி வந்த சுப்பிரமணியம் என்பவரும் உரிய மருத்துவசீட்டு இல்லாமல் இந்த மாத்திரைகளை விநியோகம் செய்து வந்த்தாக கூறப்படுகின்றது. அவரை கைது செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் அவரிடம் இருந்து 10 ஆயிரம் nitrazevam மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.இவர்கள் இருவரும் மாத்திரைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த்தும் விசாரணையில் தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தூங்க வைப்பதற்கான இந்த மாத்திரைகளை போதைக்காக இளைஞர்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் இந்த இரு கடை உரிமையாளர்களையும் கைது செய்தனர்.

போதை தரும் மாத்திரைகளை மருந்து சீட்டு இல்லாமல் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை போலீசாரால் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க