• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மது போதையில் ரயில் வருவதை கவனிக்காத கல்லூரி மாணவர்கள் – 4 பேர் பலி

November 14, 2019

கோவையில் மது போதையில் ரயில் வருவதைக் கவனிக்காத கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

கொடைக்கானலை சேர்ந்தவர் பீர் முகமது இவரது மகன் சித்திக் ராஜா வயது 22. இவர் கோவை சூலூர்அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் வயது 22. தேனியை சேர்ந்த விஷ்னேஷ் 22. இவர் அதே கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

அதே கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்திருந்த ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி 22, கவுதம் 21 ஆகியோர் நடந்து முடிந்த தேர்வில் தோல்வி அடைந்தனர் அந்த பாடத்தை எழுதுவதற்காக கல்லூரிக்கு வந்திருந்தனர். தேர்வு முடிந்ததும் இந்த ஐந்து பேரும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர் அறைக்கு சென்ற இவர்கள் மீண்டும் மது அருந்துவதற்காக ராவுத்தர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர். டாஸ்மார்க் கடையை மூடுவதற்கு நேரமாகி விட்டதால் மதுபாட்டில்களை வாங்கியவர்கள் அதே பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது அந்த வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.

போதை தலைக்கேறிய நிலையில் இருந்த கல்லூரி மாணவர்களுக்கு ரயில் வருவது தெரியவில்லை கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் இவர்கள் மீது மோதியது. ரயில் வருவதை பார்த்த விக்னேஷ் என்பவர் மட்டும் தப்பிவிட்டார் மீதமுள்ள 4 பேர் மீது வேகமாக வந்த ரயில் மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தனர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் அடிபட்டு இறந்த உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

மேலும் படிக்க