September 9, 2020
தண்டோரா குழு
கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு 2.87 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை உள்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை மதுக்கரை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோயெதிர்ப்பு பெட்டகத்தை பொதுமக்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று வழங்கினார். இதைதொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12 புதிய ஆம்புலன்ஸ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார். மேலும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் துவக்க நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மெட்ரிக் தனியார் பள்ளிகளில் இருந்து ஒருவருக்கும் என மொத்தம் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு 10,000 ரூபாய் வழங்கி கவுரவித்தார்.
மேலும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான பாடநூலில் இணையதளங்கள் பதிவேற்றம் செய்யும் பணியில் சிறப்பாக பணியாற்றிய கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
மாநில நல்லாசிரியர் விருது
சொர்ண மணி – மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பாரதிய மகாலிங்கபுரம் பொள்ளாச்சி
தனசேகரன் – முதுகலை ஆசிரியர் சீரநாயக்கன்பாளையம்
சந்திரசேகரன் – ஓவிய ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பபாளையம்
செல்வராணி – தலைமை ஆசரியர் அவினாசிலிங்கம் மேல்நிலைப்பள்ளி
ரேவதி – தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளமடை
முரளிதரன் – தலைமையாசரியர் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பெரியநாயக்கன்பாளையம்
ராஜா – முதல்வர் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம்
ஷோபனா – பாரதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செட்டிபாளையம்
பிரபு ராஜா – இடைநிலை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் கோவை மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.