• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பேருந்துக்காக காத்திருந்தவரிடம் தங்க நகை திருடிய முதாட்டி கைது

October 17, 2019 தண்டோரா குழு

கோவையில் பேருந்துக்காக காத்திருந்தவரிடம் தங்க நகை திருடிய முதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஒப்பணக்காரவீதி உள்ள பிரகாசம் பேருந்து நிலையத்தில் கனுவாய் பகுதியை சேர்ந்த சுதா பேருந்துக்காக காத்திருந்தபோது 39 கிராம் (1 இலட்சத்து 30 ஆயிரம்) மதிப்புடைய தங்க வளையங்கள் திருடுப்போனதாக கடைவீதி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து கடைவீதி போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக பெருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது புகார் அளித்த சுதா பின்புறம் 65 வயதுடைய மூதாட்டி சந்தேகக்கும்படி நடந்தது தெரியவந்து. பின்னர் பேருந்தில் ஏறும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்டு கட்டப்பையில் இருந்த தங்கப்பை அழகாக தூக்கிவிட்டு செல்லும் காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது.

அதன்பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் துடியலூர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி வயது 65 எனவும்,ரவிச்சந்திரன் என்பவருடன் கூட்டு வைத்து கொள்ளை அடித்ததும், மேலும் கடந்த 15 வருசமாக பண்டிகை காலங்களில் பேருந்துகளுக்காக காத்துருப்பவர்கள் குறிவைத்து, குறிப்பாக கட்டப்பையில் வைத்துவரும் பொருட்களை கொள்ளை அடிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இருவரையும் நேற்றிரவு நீதிபதி இல்லத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க