July 11, 2020
தண்டோரா குழு
கோவையில் பெரும்பாலான இடங்களில் மதியம் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பரவலாக 2 நாட்கள் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கோவையில் இன்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 1 மணியளவில் கனமழை மற்றும் சாரல் மழையாக மாறி மாறி பெய்தது.
கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, பன்னிமடை, தடாகம், உள்ளிட்ட பகுதிகளில் மதிய நேரம் பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.