• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெண்களுக்கான கர்ப்பபை சிகிச்சை மையம் துவக்கம் !

August 29, 2019 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மகளிர் மையத்தின் தாய்மை மருத்துவமனையில், கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கென்றே பிரத்யேகமாக, பன்னோக்கு கிளினிக்கை துவக்கியுள்ளது.

இதுகுறித்து மகளிர் மைய தாய்மை கிளினிக் இயக்குனர் டாக்டர் மிருதுபஷினி கூறுகையில்,

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான வேளாண்மை முறைக்கு பெரும் இடைவெளி உள்ளது. பெண்கள் பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் கால அளவு, உடல் பருமன், இளம் பெண்களுக்கு தேவையற்ற முறையில் முடி வளர்தல், சர்க்கரைநோய், குழந்தை பேரின்மை, மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் மற்றும் இருதய நோய் ஏற்படுகிறது. இத்தகைய சூழலில், அறிகுறிகள் வாயிலாக மூல காரணங்களை கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும். பல சமயங்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது .மேலும், பிரச்சனையை உருவாக்கும் நோக்கில் புரிந்துகொண்டு வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்தாலே பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இதற்கான வழிகாட்டுதலை எங்களது மகளிர் மருத்துவமனை மேற்கொள்கிறது.நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகான அதிக தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த பன் நோக்கு மருத்துவ சேவை மையமாக செயல்பட்டு வருகிறது இந்த மையம். பெண்களின் அனைத்து உடல் நல பிரச்சனைக்கும் ஒரே இடத்தில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

மகளிர் மைய தாய்மை கிளினிக் கர்ப்பப்பை பிரச்சனைகள் ஆலோசகர் டாக்டர் சிவன்யா வெங்கட் கூறுகையில்,

பெண்களின் உடல்நலம் பேணுவதில் உயர்தர சேவையை மேற்கொண்டு வருகிறது. இந்த மகளிர் மையம் இந்த பன்நோக்கு சிகிச்சை மையத்தில், பெண்களுக்கு சரியான தகவல்கள் மட்டும் வழிகாட்டுதல்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு பெண்களுக்கும் தனிப்பட்ட முறையிலான சிகிச்சை முறை, அறிகுறிகளின் அடிப்படையில் கண்டறிந்து சிகிச்சை தரப்படுகிறது. பெண்களின் வயது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, வாழ்வியல் முறை மேலாண்மை அடிப்படையில் சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்படுகிறது என்றார்.

மேலும் படிக்க